20% போனஸ் கேட்டு டான்டீ தொழிலாளர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 20 சதவீதம் தீபாவளி போனஸ் கேட்டு TANTEA தொழிலாளர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள TANTEA தொழிலாளர்கள் இந்தாண்டு தீபாவளிக்காக 20 சதவீதம் போனஸ் வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டான்-ட்டீ தொழிலாளர்கள், குன்னூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 2-ஆம் நாளாக இன்று கூடலூர் குடோன் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day